கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டியில் நேற்று காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. முதல் சுற்றிலேயே நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து உட்பட பல இந்திய ஆட்டக்காரர்கள் தோல்வியடைந்து வெளியேறினர். முதல் சுற்றில் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த், சதீஷ்குமார் கருணாகரன், ஆயுஷ் ஷெட்டி உள்ளிட்டோர் நேற்று 2வது சுற்றில் களமிறங்கினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 23-21, 21-17 என நேர் செட்களில் அயர்லாந்தின் நாட் நுயெனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இன்று காலிறுதியில் விளையாட உள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா/தனிஷா கிறஸ்டோ இணை 21-17, 18-21, 21-15 என்ற செட்களில் பிரான்சின் ஜூலியன் மாயோ/லியா பலெர்மோ இணையை வீழ்த்தியது. ஒரு மணி 7 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் இந்திய இணை காலிறுதிக்கு தகுதிப் பெற்றது. இவர்களை தவிர எச்.எஸ்.பிரணாய், ஆயுஷ் ஷெட்டி, சதீஷ்குமார் கருணாகரன் உட்பட மற்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகள் நேற்று 2வது சுற்றுடன் வெளியேறினர்.
The post மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த் appeared first on Dinakaran.