
கோலாலம்பூர்,
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், யுஷி தனகாவை (ஜப்பான்) சந்தித்தார்.
இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற நேர்செட்டில் தனகாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 32 வயதான ஸ்ரீகாந்த் உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் போட்டி தொடரில் 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டி இருக்கிறார். . இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த், சீனாவின் லி ஷி பெங்கை எதிர்கொள்கிறார்.