வாரஇறுதி விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

4 hours ago 1

கன்னியாகுமரி,

உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஏராளமானோர் வருகின்றனர்.

இதனிடையே, கேரளாவில் பருவமழை துவங்கிய நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதன் தாக்கம் தெரிகிறது. இரண்டு நாட்களாக பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வார விடுமுறையான இன்று கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

அவர்கள் அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் சூரிய உதயம் காண குவிந்தனர். இருப்பினும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால், சூரிய உதயத்தை காணாமல் ஏமாற்றம் அடைந்தாலும், மழையில் நனைந்தபடி, கடலில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

Read Entire Article