மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் வெற்றி

3 hours ago 3

கோலாலம்பூர்,

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 35-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், கென்டா நிஷிமோட்டோவை (ஜப்பான்) சந்தித்தார்.இந்த ஆட்டத்தில்  பிரனாய் 19-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் நிஷிமோட்டோவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 23-21, 13-21, 21-11 என்ற செட் கணக்கில் லூ குயாங் சூவை (சீன தைபே) போராடி சாய்த்தார். 

Read Entire Article