ஆம் ஆத்மி கட்சி: தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளராக பங்கஜ் சிங் நியமனம்

4 hours ago 2

புதுடெல்லி,

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி படு தோல்வியை சந்தித்தது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தோல்வியை ஜீரணித்துக் கொள்ள முடியாததால், ஆம் ஆத்மி கட்சியினரிடையே உட்கட்சி பூசல் நிலவி வந்தது.

நடைபெற இருக்கும் டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. இந்த சூழலில், ஆம் ஆத்மியின் 15 கவுன்சிலர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், முகேஷ் கோயல் தலைமையில் இந்திய பிரஸ்தா விகாஷ் என்ற புதிய கட்சியையும் தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இது ஆம் ஆத்மி கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சி புதிய மாநில நிர்வாகிகளின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.  மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களும், வெளிநாட்டு ஒருங்கிணைப்புக்கு முக்கிய தலைவர்களை நியமித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சின் மூத்த தலைவர் திலீப் பாண்டே கட்சியின் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளராக பங்கஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன அடித்தளத்தை பலப்படுத்தவும், நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய மக்களிடையே அதன் செல்வாக்கை விரிவுபடுத்தவும் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read Entire Article