மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் இன்று அடக்கம்

4 hours ago 3

பெங்களூரு,

மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பெங்களூரு மல்லேஸ்வரம் சாலையில் உள்ள சரோஜா தேவியின் வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சரோஜாதேவியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஏராளமானோர் அவரது வீட்டு முன்பு திரண்டு வருகிறார்கள். சரோஜாதேவியின் வீட்டின் முன்பு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவரது வீடு அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி அளவில் அவரது சொந்த ஊரான சென்னபட்டணா தாலுகா தசவாரா கிராமத்தில் ஒக்கலிகர் சமூக முறைப்படி இறுதிச்சடங்கு நடக்கிறது. சரோஜா தேவியின் உடல் அவரது தாய் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட உள்ளது. சரோஜா தேவியின் விருப்பப்படி அவரது கண்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன. 

Read Entire Article