மருத்துவர் பணியிடங்களை நிரப்ப ஜனவரியில் தேர்வு - அமைச்சர் மா.,சு அறிவிப்பு

2 months ago 12
தமிழகத்தில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்து 553 மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்ப ஜனவரி 27ம் தேதி தேர்வு நடத்தப்பட்டு 100 விழுக்காடு மருத்துவர்கள் நியமனம் செய்து முடிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவர்கள் தேர்வுக்காக 24 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்றும் அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்துள்ளதால் இரண்டு கட்டங்களாகத் தேர்வு நடத்தலாமா என ஆலோசனை நடத்தப்படுவதாகவும் கூறினார்.
Read Entire Article