கிருஷ்ணகிரி, மார்ச் 20: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த நொகனூர் அருகேயுள்ள என்.உச்சனப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசமூர்த்தி(38), விவசாயி. இவர் கடந்த 20 வருடமாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 13ம் தேதி, சீனிவாச மூர்த்திக்கு திடீரென வலிப்பு வந்தது. இதையடுத்து அவரை குடும்பத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 16ம் தேதி மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் மீண்டும் திரும்பவில்லை. வீட்டுக்கும் செல்லவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விவசாயி மாயம் appeared first on Dinakaran.