டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு குற்றச்சாட்டு: அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை கோரி தமிழக அரசு வழக்கு

6 hours ago 2

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ள நிலையில், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என கோரியும் டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் டாஸ்மாக் நிறுவனத்தை மையப்படுத்தி அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை தொடர் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மதுபான குடோன், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த சோதனையின் முடிவில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது.

Read Entire Article