விருதுநகர், மார்ச் 20: உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வட்டார உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியது: விருதுநகர் மண்டலத்தில், செயல்பட்டு வரும் ராஜபாளையம் வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், சிவகாசி வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் விருதுநகர் வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் அந்தந்த வட்டார விவசாயிகள் படிவம் 16 மற்றும் 17 உடன் உரிய பங்குத் தொகை மற்றும் பிரவேச கட்டணம் செலுத்தி ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் மற்றும் 2 புகைப்படத்துடன் விண்ணப்பித்து உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பாக, ராஜபாளையம் வட்டத்தினர் 97863-36396, 76959-53836 என்ற எண்ணிலும் சிவகாசி பகுதியினர் 90425-19911, 94420-58126 என்ற எண்ணிலும், விருதுநகர் வட்டத்தினர் 98434-81831, 97151-09134 ஆகிய தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேரலாம் appeared first on Dinakaran.