மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே 4-ம் தேதி நடக்கிறது - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

3 hours ago 1

புதுடெல்லி,

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நீட் தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2025-26-ம் கல்வியாண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வு வருகிற மே மாதம் 4-ம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இந்த நீட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (பிப்ரவரி 7) மாலை முதல் தொடங்கியுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக மார்ச் 7-ம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வுக்கான கட்டணமாக பொதுப்பிரிவுக்கு ரூ.1,700, பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1,600, எஸ்.சி./ எஸ்.டி. பிரிவுக்கு ரூ.1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article