ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் இப்ராகிம்பட்டினம் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் மாணவிக்கு தலைமை ஆசிரியர் (வயது 59) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்து சிறையில அடைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.