![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38152803-cinema-01.webp)
சென்னை,
அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான 'விடாமுயற்சி' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், திரைப் பிரபலங்கள் பலர் 'விடாமுயற்சி' திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த படத்தில் நடித்துள்ள நடிகை ரெஜினா, சென்னை சத்யம் திரையரங்கில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் படத்தை பார்த்து மகிழ்ந்தார்.
படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், "திரைப்படம் மிகவும் அருமையாக இருந்தது. ஹாலிவுட் தரத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் குமார், நடிகர் அர்ஜுன் ஆகியோரின் நடிப்பும், அனிருத்தின் இசையும் நன்றாக இருந்தது. புதிய வில்லியாக நடிகை ரெஜினா கலக்கிவிட்டார்" என்று தெரிவித்தார்.