![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38156136-gd.webp)
பிரேசிலா,
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பிரேசில். இந்நாட்டின் சவோ பாலோ நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி, விமான உரிமையாளர் என 2 பேர் பயணித்தனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. பாரா பாண்டா என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேரும் உயிரிழந்தனர். மேலும், விபத்துக்குள்ளான பகுதியில் மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.