![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35678856-accident.webp)
மும்பை,
மராட்டிய மாநிலம் புனேவின் ஹின்ஜாவாடியிலிருந்து ஒரு லாரி மஹாலுங்கே நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் சென்றுக் கொண்டிருந்த 2 பெண்கள் மீது ஏறியது. இதில் 2 பெண்களும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.