
மும்பை,
நாட்டில் கடந்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. எனினும், இது லேசான அளவிலேயே பாதிப்புகளை ஏற்படுத்தும் என டாக்டர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், மராட்டியத்தின் தானேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயது கோவிட்-19 நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தானே நகராட்சி தெரிவித்துள்ளது.
மும்ப்ராவைச் சேர்ந்த அவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மே 22, 2025 அன்று தானேயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதற்கிடையே பெங்களூருவில் நேற்று ஒருவர் கொரோனா வைரசால் இறந்தார்.