
கோலாலம்பூர்,
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரரான ஸ்ரீகாந்த், சீனாவின் லி ஷி பெங்கை எதிர்கொண்டார்.
இதில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லி ஷி பெங் 21-11 மற்றும் 21-9 என்ற நேர் செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.