மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணியின் அபார வெற்றிக்கு 'லாட்கி பகின்' திட்டம் பங்களித்ததாக பரவலாக கூறப்பட்டது. மராட்டிய அரசு இந்த திட்டத்தின் கீழ் ஏழைப்பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதி உதவி வழங்கி வருகிறது.
இந்த நிலையில், தானே நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டு பேசியதாவது:-
"மகாயுதி அரசு, 'லாட்கி பகின்' திட்டத்தை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்காது. அந்த திட்டம் தங்கு தடையின்றி தொடரும். சமூக நலத்திட்டங்களுக்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது. மக்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டதால் மும்பை, தானே, புனே மற்றும் மராட்டியத்தின் பிற பகுதிகளில் நிலுவையில் உள்ள வீட்டுவசதி திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும்."
இவ்வாறு அவர் கூறினார்.