டெல்லி தேர்தல்: ஜனநாயகத் திருவிழாவில் தங்கள் மதிப்புமிக்க வாக்குகளை பதிவு செய்யுங்கள் - பிரதமர் மோடி

2 hours ago 1

புதுடெல்லி,

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது. இந்த சூழ்நிலையில் இன்று பலப்பரீட்சை நடக்கிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது. பாதுகாப்பு பணிகளை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, "டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்குள்ள வாக்காளர்கள் இந்த ஜனநாயகத் திருவிழாவில் முழு ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில், முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் தலைமுறையினருக்கும் எனது சிறப்பு வாழ்த்துக்கள். நினைவில் கொள்ளுங்கள்- முதலில் வாக்கு, பின்னர் புத்துணர்ச்சி" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார். 

Read Entire Article