மராட்டிய சட்டசபை தேர்தல்; தாக்கத்தை ஏற்படுத்த தவறிய சிறிய கட்சிகள்

1 month ago 8

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி இமாலய வெற்றியை பெற்று உள்ளது. அந்த கூட்டணி மாநிலத்தில் 230 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. பாஜக 132 இடங்களிலும், சிவசேனா கட்சி 57 இடங்களிலும் என்.சி.பி 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எதிர்க்கட்சி கூட்டணிக்கு 46 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

உத்தவ் சிவசேனா 20 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், என்சிபி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுளன. மராட்டிய தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இருப்பது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சிறிய கட்சிகள் பெரிய அளவில் வாக்குகளை பிரிக்கவில்லை. இதுவே ஆளும் கட்சி கூட்டணி இமாலய வெற்றி பெற முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 237 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இவர்களில் 99 சதவீதம் பேர் டெபாசிட் கூட பெறவில்லை. இதேபோல 125 தொகுதிகளில் போட்டியிட்ட ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா, 200 தொகுதிகளில் போட்டியிட்ட வஞ்சித் பகுஜன் அகாடி கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ராஜ்தாக்கரேவின் மகன் அமித்தாக்கரே மஹிம் தொகுதியில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

Read Entire Article