'மார்கோ' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

3 hours ago 1

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். இவர் கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவரது நடிப்பில் வெளியான 'சீடன்' மற்றும் 'கருடன்' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இயக்குனர் ஹனீப் அடேனி இயக்கத்தில் இவரது நடிப்பில் கடந்த டிசம்பர் 20-ந் தேதி வெளியான படம் 'மார்கோ'. இப்படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய 'கே ஜி எப், சலார்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இதற்கு இசையமைத்துள்ளார். ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தில் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் , அபிமன்யூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாளில் ரூ.10.8 கோடி வசூல் செய்தது. இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 14-ந் தேதி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Biggest action thriller of Malayalam cinema is coming your way! Get ready for the ultimate adrenaline rush with #Marco, streaming Feb 14 on SonyLIV.@Iamunnimukundan #ShareefMuhammed #CubesEntertainments #HaneefAdeni #RaviBasrur #KabirDuhanSingh #AbhimanyuShammyThilakan pic.twitter.com/rTYVnYwJx2

— Sony LIV (@SonyLIV) January 31, 2025
Read Entire Article