
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய, சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, வருவாய் துறையில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்களாக என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமசந்திரன், "பணி நியமனம் செய்யும் போதே சிறப்பு காலவரைமுறை ஊதியத்தில் தான் பணி நியமனம் செய்துள்ளனர். வருவாய்த்துறையில் மட்டும் அல்ல மற்ற துறைகளிலும் இதே நிலைதான்.
முதல்-அமைச்சரிடம் பேசி கால முறை ஊதியத்தினை மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும். இதுவரை கிராம உதவியாளர்கள் மரணம் அடைந்தால் அவர்கள் வாரிசுகளுக்கு பணி வழங்கப்படுது இல்லை. 10 நாட்களுக்கு முன்பாக கிராம உதவியாளர்கள் மரணம் அடைந்தால் அவர்கள் வாரிசுகளுக்கு பணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.