மரக்காணம், டிச. 13: மரக்காணம் அருகே காணிமேடு கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(40), விவசாயி. இவர் நேற்றுமுன்தினம் மாலை தனது வீட்டில் இருந்து ஓங்கூர் ஆற்றில் செல்லும் வெள்ள பெருக்கில் நீந்திக் கொண்டு தனது வயலுக்கு சென்று உள்ளார். தனது வயலை பார்த்துவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு ஓங்கூர் தரை பாலத்தின் வழியாக நீந்திக் கொண்டு வந்துள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் சிக்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலமுருகனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அப்போது வெள்ளம் அதிகமாக இருந்ததால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.இதை தொடர்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலமுருகனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் தேடினர். இந்நிலையில், பாலமுருகனின் உடல் அவரது நிலத்தின் அருகிலேயே கரை ஒதுங்கி இருந்தது. தகவல் அறிந்த மரக்காணம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனக செட்டிகுளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மரக்காணம் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி சடலமாக மீட்பு appeared first on Dinakaran.