மயிலாப்பூர் சிவசாமி சாலையில் வெள்ளநீரில் வாகனத்துடன் மயங்கி விழுந்த பெண்: உரிய நேரத்தில் மீட்ட போலீஸ்

3 months ago 15

சென்னை: மயிலாப்பூர் சிவசாமி சாலையில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கன மழையால் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. நேற்று காலை பெண் ஒருவர் ஸ்கூட்டரில் ராயப்பேட்டை நோக்கி வந்த போது, சிவசாமி சாலையில் தேங்கியுள்ள தண்ணீரில் அவரால் வாகனத்தை ஓட்ட முடியாமல் திணறினார். ஒரு கட்டத்தில் அவர் வெள்ள நீரிலேயே தனது வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் அவர் மயக்கமடைந்தார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மயிலாப்பூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு வெள்ள நீரில் விழுந்த பெண்ணை பத்திரமாக மீட்டு சாலையோரம் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த ெபண் கண் விழித்தார். பிறகு போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்து, மயக்கமடைந்த பெண்ணை பத்திரமாக அனுப்பிவைத்தனர். மயிலாப்பூர் சிவசாமி சாலையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பாதுகாப்பு காரணமாக போக்குவரத்து போலீசார் திருவள்ளுவர் சிலை அருகே தடுப்புகள் அமைத்து வாகன போக்குவரத்தை தடை செய்தனர்.

The post மயிலாப்பூர் சிவசாமி சாலையில் வெள்ளநீரில் வாகனத்துடன் மயங்கி விழுந்த பெண்: உரிய நேரத்தில் மீட்ட போலீஸ் appeared first on Dinakaran.

Read Entire Article