மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெறும் துலா உற்சவம்: மாயூரநாதர் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

3 months ago 12

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் துலா உற்சவம் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் திருவாடுதுறை ஆதிநகருக்கு சொந்தமான மாயூரநாதர் திருக்கோயில் தேரோட்டம் நேற்று விமர்சியாக நடைபெற்றது. தேரோட்டத்தை திருவாவடுதுறை ஆதினம் அம்பலவாண தேசிய பரமாச்சாரியார் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மேள, தாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க நான்கு ரக வீதிகளில் தீர் வலம் வந்தது. துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடைமுக தீர்த்தவாரி இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இதில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராட உள்ளனர். இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெறும் துலா உற்சவம்: மாயூரநாதர் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article