மயிலம், ஜன. 6: ரேஷன் கடைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த தழுதாளியில் உள்ள நியாயவிலை கடை அருகில் அக்கிராமவாசிகள் சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பாம்பு ஒன்று ரேஷன் கடைக்குள் புகுந்ததை பார்த்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக நியாயவிலை கடை ஊழியருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த ஊழியர், கடையை திறந்து பார்த்தபோது, அங்கு கரு நாகம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து பொதுமக்கள் ரேஷன்கடை முன் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்பு துறை அதிகாரி முருகையன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து, கடைக்குள் இருந்த கரு நாக பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
The post மயிலம் அருகே பரபரப்பு ரேஷன் கடைக்குள் புகுந்த பாம்பு appeared first on Dinakaran.