மன்னார்குடி, நவ. 18: மன்னார்குடி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகள் கவிதா (36). இவருக்கும் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த துளசியாபட்டினத்தை சேர்ந்த மகேந்திரன் (43) என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்று 14 ஆண்டுகளாகிறது. நர்சாக பணியாற்றிய கவிதா மீது சந்தேகமடைந்து மகேந்திரன் துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கவிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனால் இறந்த கவிதாவின் உறவினர்கள் மற்றும் அவரது தாய் மாமா ஆனந்த் உள்ளிட்டோர் கவிதாவின் கணவர் மகேந்திரனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்ததால் அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து மன்னார்குடி டிஎஸ்பி அஸ்வத் ஆன் டோ ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து இரு தரப்பையும் விலக்கிவிட்டு ஆர்.வி. ஆனந்தை விசாரணைக்கு நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தகவல் அறிந்ததும் 200க்கும் மேற்பட்டவர்கள் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து எஸ் பி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்தார். தொடர்ந்து பெண் போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆர்வி ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இறந்த கவிதாவின் சகோதரர் முத்து வீரசிவன் என்பவர் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தனது சகோதரியின் மரணத்தின் சந்தேகம் இருப்பதால் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதித்து இறந்த கவிதாவின் கணவர் மகேந்திரனை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
The post மன்னார்குடி நர்சு மர்ம சாவு appeared first on Dinakaran.