மனைவியை கொல்ல முயன்ற அதிமுக நகர செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்

5 hours ago 1


சின்னமனூர்: இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு, மனைவியை கொல்ல முயன்ற சின்னமனூர் நகர அதிமுக செயலாளர், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தேனி மாவட்டம், சின்னமனூரில் அதிமுக நகரச் செயலாளராக இருந்தவர் பிச்சைக்கனி. இவர் மீது தனது அலுவலகத்திற்கு பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி மகாலட்சுமி. இந்நிலையில், பிச்சைக்கனிக்கும், கம்பத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கம்பத்துக்கு சென்ற மகாலட்சுமி, அங்கு இளம்பெண்ணுடன் தனது கணவர் தனிமையில் இருந்ததைப் பார்த்து கண்டித்துள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த பிச்சைக்கனி தனது மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். இது குறித்த புகாரில் கம்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள பிச்சைக்கனியை தேடி வருகின்றனர். இவரது செயல்பாடுகள் குறித்து கட்சி தலைமைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் நகரச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து பிச்சைக்கனி நீக்கப்படுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post மனைவியை கொல்ல முயன்ற அதிமுக நகர செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article