மனிதவள மேலாண்மைத் துறை குறித்த அறிவிப்புகள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு!!

2 hours ago 2

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலன் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள், மனிதவள மேலாண்மைத் துறை குறித்த அறிவிப்புகள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்து 19.11.2024 அன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மனிதவள மேலாண்மைத் துறையின் பணிகளான அரசுத் துறைகளின் நிர்வாகம் மற்றும் தேவைகேற்ப அரசுப்பணியாளர்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே கணித்தல், மனித வளம் தொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகள், விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுதல், அவற்றை தொடர்ச்சியாக கண்காணித்தல், அரசுப் பணிக்கான உரிய நபர்களைத் தேர்ந்தெடுத்தல், பயிற்சி அளித்தல் ஆகிய திட்டங்கள் குறித்து மனிதவள மேலாண்மைத்துறை மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலன் துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அரசுப் பணியாளருக்கான திட்டங்களை நல்ல முறையில் விரைந்து செயல்படுத்திடுமாறு அறிவுரைகள் வழங்கினார்கள்.

ஆய்வுக் கூட்டத்தில் மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., பயிற்சித் துறை தலைவர் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், இ.ஆ.ப., ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்ந்த காவல் துறை தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மனிதவள மேலாண்மைத் துறை குறித்த அறிவிப்புகள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு!! appeared first on Dinakaran.

Read Entire Article