ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து மகா சிவராத்திரி ஒரு சனாதன பண்டிகை

2 hours ago 1

சென்னை: மகாசிவராத்திரி என்பது ஒரு சனாதன பண்டிகை என ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மகா சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மகாசிவராத்திரி என்பது விழிப்புணர்வுக்கான ஒரு புனிதமான சனாதன பண்டிகையாகும்.

மந்தநிலையை தாண்டி எழுவதற்கும், குழப்பங்களுக்கு மத்தியில் தெளிவைத் தேடுவதற்கும், சிறந்த மாற்றத்தைத் தழுவுவதற்கும் வழிவகுக்கும். இது தேசத்தின் நலனுக்காக சுய விழிப்புணர்வையும், புத்துணர்வையும் அளிக்கக் கூடியது. சிவபெருமான் மற்றும் ஆதி சக்தியின் தெய்வீக சங்கமம் நமக்கு தேவையான மாற்றத்திற்கான சக்திவாய்ந்த ஆற்றலை வழங்குவதோடு, விக்சித் பாரத் 2047ஐ உருவாக்குவதற்காக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை வளர்க்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து மகா சிவராத்திரி ஒரு சனாதன பண்டிகை appeared first on Dinakaran.

Read Entire Article