சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு விரும்பினால், மார்ச் மாதம் 1ம் தேதியிலிருந்தோ, புதிய நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் 1ம் தேதியிலிருந்தோ செயல்படுத்த முடியும்.
இன்றைய நிலையில், இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், பஞ்சாப், கர்நாடகம், இமாச்சல்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் எதுவும் அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கவில்லை. எனவே, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
The post அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.