மன உளைச்சலுக்காக ரூ.5 லட்சம், வழக்கு செலவுக்காக ரூ.1 லட்சம்.. கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!

1 month ago 5

சென்னை : ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் வீட்டை கட்டித் தராத கட்டுமான நிறுவனம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.5 லட்சமும், வழக்கு செலவுக்காக ரூ.1 லட்சமும் வழங்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் வீட்டை புதுப்பித்துத் தர கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். ஆனால் ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்தில் வீட்டை கட்டிக் கொடுக்கவில்லை என்பதால், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய விதிகளின் படி வீடு கட்ட கொடுக்கப்பட்ட தொகையை வட்டியுடன் திரும்ப வழங்க கோரி ரியல் எஸ்டேட் முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீட்டார்.

இதில், கட்டட செலவுக்கான மீத தொகையை செலுத்தவில்லை என்பதால் முழு தொகையை கோர முடியாது என தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, ரியல் எஸ்டேட் முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சுபஸ்ரீ மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு நீதிபதி நிஷாபானு, கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் முரளிகுமரன், ஆஜராகி, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை விதிகளை கட்டுமான நிறுவனம் மீறி செயல்ப்பட்டுள்ளதால் மனுதாரர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக வாதம் வைத்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், கட்டுமான நிறுவனம் மனுதாரருக்கு ரூ.2.02 கோடியை ஆண்டுக்கு10.25% வட்டியுடன் திரும்பத் தர ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கவும், வழக்கு செலவாக ஒரு லட்ச ரூபாய் வழங்கவும் கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post மன உளைச்சலுக்காக ரூ.5 லட்சம், வழக்கு செலவுக்காக ரூ.1 லட்சம்.. கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…! appeared first on Dinakaran.

Read Entire Article