பெங்களூரு,
சுரங்க வழக்கை விசாரிக்கும் மூத்த போலீஸ் அதிகாரியை மிரட்டியதாக மத்திய மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசு ஊழியரை தனது பணியை செய்ய விடாமல் மிரட்டியதாக காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்திரசேகரின் புகாரின் அடிப்படையில் மத்திய மந்திரி குமாரசாமி மற்றும் அவரது மகன் நிக்கிக் குமாரசாமி உள்ளிட்டோர் மீது பெங்களூரு சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மந்திரி குமாரசாமி 2006 முதல் 2008 ம் ஆண்டு வரை கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தபோது, பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சாய் வெங்கடேஸ்வரா மினரல்ஸ் (எஸ்எஸ்விஎம்) நிறுவனத்திற்கு 550 ஏக்கர் சுரங்க குத்தகைக்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.