
மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள இளநிலை பொறியாளா் பிரிவில் 1,340 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் எஸ்.எஸ்.சி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் கட்டுமானப் பொறியியல் (சிவில்), இயந்திரவியல் (மெக்கானிக்கல்), மின்னியல் (எலக்ட்ரிக்கல்) பிரிவில் 1,340 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான தோ்வுக்கு வரும் 21-க்குள் https://ssc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணத்தை 22 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் மேற்கோள்ளலாம். என் ஜீனியரிங் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான தோர்வுகள் வரும் அக்டோபா் மாதம் கணினி வாயிலாக நடைபெறவுள்ளன. தமிழகத்தில் சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் இத்தோ்வு நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.