'மத்திய அரசின் கேள்விகளுக்கு பதிலளித்தால் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும்' - எல்.முருகன்

3 months ago 21

சென்னை,

தமிழகத்திற்கு, கல்விக்கான நிதி வழங்கும் விவகாரத்தில், கேள்விகளுக்கு பதிலளித்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு கொடுத்திருக்கிறது. அதேபோல், மாநிலங்களுக்கான நிதி பகிர்வு அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ரூ.7,268 கோடி நிதியை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விடுவித்துள்ளார். கல்விக்கான நிதியை பொறுத்தவரை, மத்திய அரசு சில கேள்விகளை கேட்டுள்ளது. அதற்கான பதில்களை அளித்தால் நிதியை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்."

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார். 


Read Entire Article