
புதுடெல்லி
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சர்வதேச செய்தி நிறுவனமாக ராய்ட்டர்ஸ் உள்ளது. இந்தநிலையில் இந்தியாவில் இந்த நிறுவனத்தின் எக்ஸ் வலைத்தள கணக்கு பக்கம் முடக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் வலைத்தள பக்கத்தை முடக்க எந்த கோரிக்கைகையும் விடுக்கப்படவில்லை.
எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். நிலைமை விரைவில் சீராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஆபேரஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் வலைத்தள பக்கத்தை முடக்க கோரி வலியுறுத்தப்பட்டன. இந்த கோரிக்கை தற்போது செயலுக்கு வந்துள்ளதாக எக்ஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.