மதுரையில் மே 12-ந்தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவிப்பு

4 weeks ago 4

மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா ஏப்ரல் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 8-ந்தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு மே 12-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் மே 12-ந்தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார். அதனை ஈடுசெய்யும் வகையில் மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Read Entire Article