இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது - மத்திய அரசு

3 hours ago 2

டெல்லி,

2020ம் ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2023ம் ஆண்டு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தியாவில் கொரோனாவால் 5 லட்சத்து 33 ஆயிரத்து 666 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, 257 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா பாதிப்பு சிறிய அளவிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் மக்கள் சற்று கலக்கம் அடைந்தனர்.

இந்நிலையில் , இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக நிலைமையை சுகாதார அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் கவலைப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

Read Entire Article