
லக்னோ,
நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 61வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதரபாத் 18.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதன் மூலம் லக்னோவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றிபெற்றது.
ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை லக்னோ இழந்தது.
ஏற்கனவே குஜராத், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. 4வது அணியாக இன்னும் ஒரு அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல முடியும். 4வது இடத்தை பிடிக்க லக்னோ, மும்பை, டெல்லி இடையே கடும் போட்டி நிலவி வந்தது. நேற்றைய ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை லக்னோ இழந்தது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல மும்பை, டெல்லி இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.