மதுரை வடக்கு தொகுதியில் மழை வெள்ள பாதிப்புகள்: கோ.தளபதி எம்எல்ஏ ஆய்வு

1 month ago 5

மதுரை, அக். 15: மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் மழை, வெள்ள பாதிப்புகளை கோ.தளபதி எம்எல்ஏ பார்வையிட்டு, மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். மதுரை மாநகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதேபோல் மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட செல்லூர், நரிமேடு கட்டபொம்மன் நகர் பகுதிகளில், மழை நீர் தெருக்களுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் புகுந்தது. இதன்படி மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார்.

மேலும் வாஞ்சிநாதன் தெரு, ஜீவா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வீடுகளை சூழ்ந்துவிடாமல் இருக்க மண் மூட்டைகள் வைத்து அடைக்கும் பணிகளைத் துரிதப்படுத்தியதுடன், கட்டபொம்மன் நகர் ஜோதி பள்ளி அருகில் உள்ள கால்வாயில் படர்ந்திருந்த செடி, கொடிகளையும், ஆகாயத்தாமரைகளையும் அகற்றிட மாநகராட்சிப் பணியாளர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post மதுரை வடக்கு தொகுதியில் மழை வெள்ள பாதிப்புகள்: கோ.தளபதி எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article