ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 10 உயர்ந்து ஏலம்: விவசாயிகள் மகிழ்ச்சி

3 hours ago 4

க.பரமத்தி, மே. 14: ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரே வாரத்தில் கொப்பரை தேங்காய் கிலோவிற்கு ரூ.10உயர்ந்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, கரூர் ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய பகுதிகளான புன்னம், அத்திப்பாளையம், குப்பம், முன்னூர், தென்னிலை, மொஞ்சனூர், கார்வழி, அஞ்சூர், மற்றும் புகழூர், வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாபாளையம், தவிட்டுப்பாளையம், திருக்காடுதுறை, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் விலையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள பருப்பினையும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார் 8850 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலை குறைந்த விலையாக ரூ. 32, ஒரு கிலோ தேங்காய் அதிக விலையாக ரூ.49க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தைவிட கிலோவிற்கு ரூ.2 உயர்ந்து ஏலம் போனது. கொப்பரை தேங்காய்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 90மூட்டைகளில் கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.183, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.185 ஏலம் போனது.

கடந்த வாரத்தைவிட கிலோவிற்கு ரூ.10 உயர்ந்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 10 உயர்ந்து ஏலம்: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article