பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் அனாதையாக விட்டு செல்லப்பட்ட சிறுமி

3 hours ago 4

கருர், மே 14: பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் அனாதையாக விட்டு செல்லப்பட்ட சிறுமி, குழந்தைகள் காப்பகத்தில் தனியாக உள்ளார். சிறிமி குறித்த விவரம் எதுவும் தெரிந்தால் தொடர்பு கொள்ளும்படி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள ஹெட்ஸ் குழந்தைகள் இல்லத்தில் கடந்தாண்டு நவம்பர் 27ம்தேதி முதல் தங்க வைக்கப்பட்டுள்ள கனிமொழி (7) என்ற சிறுமியை கடந்தாண்டு நவம்பர் 26ம்தேதி அன்று சம்பூரணம் என்பவர் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் விட்டு சென்றுள்ளார். குழந்தைகள் இலவச அழைப்பு எண் 1098க்கு தகவல் வந்தது.

இதனடிப்படையில், சைல்டுலைன் பணியாளரால் மீட்டு குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டு கரூர் வெண்ணைமலையில் உள்ள அன்புக்கரங்கள் குழந்தைகள் இல்லத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு பின்னர் கடந்தாண்டு நவம்பர் 27 முதல் இன்று வரை குளித்தலை ஹெட்ஸ் இல்லத்தில் இருந்து வருகிறார்.
சிறுமி பற்றிய விபரம் இன்று வரை தெரியவில்லை. இவரது அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள் பற்றியும், இவரின் முகவரி பற்றியும் தெரியாத காரணத்தினால், சிறுமியின் உறவினர்கள் இருப்பின், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலக வாட்ஸ் அப் எண்ணில் (8903331098) தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் அனாதையாக விட்டு செல்லப்பட்ட சிறுமி appeared first on Dinakaran.

Read Entire Article