மதுரை, மார்ச் 11: மதுரை பழங்காநத்தம் பகுதியில் ரூபி கல்விக் குழுமத்தின், ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாடக்குளம் ரூபி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் சந்திரகுமார் மற்றும் நாகேந்திரன் தலைமை வகித்தனர். பள்ளியின் பொருளாளர் சாந்தாதேவி முன்னிலை வகித்தார்.
பள்ளியின் முதல்வர் நல்லாசிரியர் முனைவர் வெங்டேசன் ஆண்டறிக்கை வாசித்தார். மாடக்குளம் ரூபி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியை சங்கீதா வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
The post மதுரை ரூபி மெட்ரிக். பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.