சென்னை: மதுரை, ராமநாதபுரம், விழுப்புரம், திருவள்ளூர் மேற்கு உள்பட 14 மாவட்டங்களுக்கு பாஜகவில் புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னையில் பாஜகவில் 7 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தென்சென்னை, சென்னை கிழக்கு, மத்திய சென்னை கிழக்கு மாவட்டங்களுக்கும் பாஜகவில் புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய சென்னை மேற்கு, சென்னை மேற்கு, வடசென்னை கிழக்கு, மேற்கு மாவட்டங்களுக்கும் பாஜகவில் புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவராக அஸ்வினை மீண்டும் தேர்ந்தெடுத்ததற்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அஸ்வினை எதிர்த்து போட்டியிட்ட பாஜக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக மாநில செயலாளர் சுமதி வெங்கடேசனை முற்றுகையிட்டு அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு மாவட்டங்களில் பாஜக தலைவர்கள் நியமனத்தால் கட்சிக்குள் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மாவட்டத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் வேலூரில் பலர் பாஜகவில் இருந்து விலகி உள்ளனர். நெல்லை, கோவை மாவட்டங்களிலும் கட்சி விதிகளை மீறி மாவட்ட தலைவர்கள் நியமனம் நடந்துள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
3வது முறையாக மாவட்டத் தலைவராக பதவி வகிக்க முடியாது என்ற விதியை மீறி வேலூரில் பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளது. கட்சிக்காக உழைக்காதவர்களே மாவட்டத் தலைவராக கட்சித் தலைமை நியமிப்பதாக பாஜக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
The post மதுரை, ராமநாதபுரம், விழுப்புரம், திருவள்ளூர் மேற்கு உள்பட 14 மாவட்டங்களுக்கு பாஜகவில் புதிய தலைவர்கள் தேர்வு appeared first on Dinakaran.