ராஜபாளையம்: தபால் துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ராஜபாளையத்தில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய அரசு அஞ்சல் துறையை தனியார்மயமாக்கும் செயலை கண்டித்தும், அஞ்சல் துறை ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜபாளையம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிளைத் தலைவர் மணிகண்டன் தலைமையில் தேசிய தபால் ஊழியர் சங்க செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் பிச்சை, பாண்டீஸ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து தபால் ஊழியர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.