விருதுநகர்: விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி மோகன லட்சுமி. இவரது மகன் சபரி சாஸ்தா(18). இவர் பிளக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக வேலைக்கு போகாமல் ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதை தாய் மோகன லட்சுமி கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சபரி சாஸ்தா, நேற்று முன்தினம் தாய், தந்தை வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் சபரி சாஸ்தா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மேற்கு போலீசில் தந்தை சக்திவேல் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post வேலைக்கு போகுமாறு தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை appeared first on Dinakaran.