மதுரை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம்

3 months ago 18

மதுரை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட திண்டுக்கல்-திருச்சி ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, பூங்குடி-திருச்சி ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16845) 9ம் தேதி, 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை, 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை, 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வ.எண்.16846) இன்று (செவ்வாய்க்கிழமை), 10ம் தேதி, 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை, 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை, 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு ஈரோடு புறப்பட்டு செல்லும். அதேபோல, செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16848) இன்று, 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை, 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் மயிலாடுதுறை செல்லும். நவராத்திரி பண்டிகை விடுமுறையை தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக, வருகிற 11ம் தேதி, 12ம் தேதி மற்றும் 16ம் தேதி ஆகிய 3 நாட்கள் மட்டும் இந்த ரயில் விருதுநகரில் இருந்து மதுரை, திண்டுக்கல் வழியாக திருச்சி செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மதுரை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article