மதுரை காந்தி மியூசியத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

3 weeks ago 5

மதுரை, ஜன. 11: மதுரை காந்தி மியூசியம், அன்னை தெரசா மகளிர் பல்கலை. ஆராய்ச்சி மையம் சார்பில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்பட்டது. காந்தி மியூசிய காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் பேசும்போது, ‘‘மகாத்மா காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நிரந்தரமாக 1915 ஜனவரி மாதம் 9ல் திரும்பினார். இதனால் இந்நாள் வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது’’ என்றார்.

பின்னர் வெளிநாடு வாழ் இந்தியர் சண்முகசுந்தரம் கவரவிக்கப்பட்டார். காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் இந்த தினத்தின் பெருமைகள் குறித்து விளக்கி பேசினார். மியூசியத்தின் இளநிலை உதவியாளர் நித்யாபாய் மாணவிகள் பங்கேற்ற கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். தெரசா பல்கலை வணிகவியல் துறை உதவி பேராசிரியை வள்ளி தேவசேனா வரவேற்றார். உதவி பேராசிரியை பத்மாவதி நன்றி கூறினார். இதில் பல்கலைக்கழக மாணவிகள் திரளானோர் பங்கேற்றனர்.

The post மதுரை காந்தி மியூசியத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் appeared first on Dinakaran.

Read Entire Article