இலுப்பூர், மார்ச் 27: அன்னவாசல் அருகே உள்ள மதிய நல்லூர் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவன் காமராஜர் விருது பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வி துறை மூலம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் கல்வி மற்றும் கலை இவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் காமராஜர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், அன்னவாசல் அருகே உள்ள மதிய நல்லூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த பவிக்ஷாத் என்ற மாணவன் இந்த ஆண்டிற்கான காமராஜர் விருது பெற்றுள்ளார். புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் இந்த விருதை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், நேர் முக உதவியாளர் வௌ;ளைசாமி, சுற்று சூழல் அலுவலர் சாலை செந்தில், பள்ளி துணை ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post மதியநல்லூர் அரசு பள்ளி மாணவனுக்கு காமராஜர் விருது வழங்கல் appeared first on Dinakaran.