மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

1 month ago 6

சென்னை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கத்தின் தலைவர் சேம.நாராயணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஆணையர் சம்பத், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாலர்கள், குலாலர் சமூகத்தை சேர்ந்தவர்களை அழைத்து நேற்று ஆலோசனை நடத்தி ஒவ்வொருவரிடமும் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் கேட்டு அறிந்தார். மண்பாண்ட தொழிலாளர்கள் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம்.

அதன்படி, பொங்கல் பண்டிகைக்கு விலையில்லாமல் குடும்ப அட்டை தாரர்களுக்கு ஒரு மண்பானை ஒரு மண அடுப்பு வழங்க வேண்டும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மூன்று மாதத்திற்குள் எடுக்க வேண்டும். அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் குலாலர் சமுதாயத்திற்கு 2 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மழைக்காலங்களில் மழைக்கால நிவாரண நிதி ரூ.5 ஆயிரம் வழங்குவதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், குலாலர்கள், பல்லாண்டு காலமாக வசித்து வரும் இடத்திற்கு அடிமனை பட்டா வழங்கிட வேண்டும், விலையில்லாமல் களிமண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

தெய்வசிலைகள், பொம்மைகள், மண்பாண்டங்கள் விற்க அரசு செலவில் கடைகள் கட்டி குறைந்த வாடகைக்கு விட வேண்டும், உழவர் சந்தையில் கடை ஒதுக்க வேண்டும், களிமண்ணால் செய்யப்பட்ட அழகிய பொருட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது. அதில் ஒரு சதவீதத்தை மண்பாண்ட தொழிலாளர்கள் நலனுக்காக ஒதுக்கீட வேண்டும். தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article